சீன விமானங்கள் பறக்கின்றன!தடைப்பட்டு போயிருந்த சீன விமான சேவைகள் மீண்டும் இலங்கைக்கு வழமைக்கு திரும்பியுள்ளது.

 சீன விமான நிறுவனமான எயார் சைனா இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, முதலாவது விமானம் நேற்றிரவு 142 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், எயார் சைனா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியது.

இந்தநிலையில் அந்த சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவர்களை வரவேற்பதற்காக நேற்றைய தினம் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

No comments