கனடாவில் இனப்படுகொலை நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!


கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் கடினமானது. இதேபோன்று இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தெரிவித்தார்.

கனடா இருமொழி தேசமாக உள்ளது. கனேடிய வாழ்க்கை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு இருமொழி இயல்புடையது. கனடா உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இப்படித்தான் தன்னை முன்வைத்துள்ளது.  இது போன்று இலங்கையும் சாதிக்க முடியும் என்று எரிக் வால்ஷ் கூறினார்.

கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் நல்வாழ்வுக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் என்று திரு.வால்ஷ் பாராட்டினார்.

கனடாவில் தமிழ் மருத்துவர்கள் உள்ள ஏராளமான கனேடிய தொழில் வல்லுநர்கள் உள்ளனர். இரண்டு தமிழ் வம்சாவளி அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளனர்  என்று எரிக் வால்ஷ் தொிவித்தார்.

குருநாகலில் தலசீமியா மையத்தை அமைப்பது போன்ற பல திட்டங்களை இலங்கையில் கனேடிய நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். 

1960 களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11,000 அடி ஓடுபாதையை அமைக்க இலங்கைக்கு கனடா உதவியது என்று அவர் கூறினார்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் கனேடிய உதவியுடன் சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் பெற்றதை அவர் நினைவு கூர்ந்தார்.

அண்மையில் கனேடிய தமிழ் நடை திட்டத்தின் மூலம் 250 மில்லியன் ரூபாவை திரட்டிய கனேடிய தமிழ் காங்கிரஸையும் பாராட்டினார்.

No comments