ஆஸ்திரேலியாவில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்து: 4 பேரைக் காணவில்லை!
அவுஸ்ரேலியா குயின்லாந்தில் இராணுவ உலங்கு வானூர்தி விபத்துகுள்ளானதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என்று அவுஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இன்று சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பள்ளத்தில் விழுந்த உலங்கு வானூர்தியில் இருந்தவர்களைக் தேடும் நடவடிக்கைள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கையில் உலங்கு வானூர்தியில் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேடுதலில் முழு கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் ஆபரேஷன் தாலிஸ்மேன் சேபர் எனப்படும் ஒரு பெரிய அமெரிக்கக் கூட்டுப் படைகளுடனான பன்னாட்டு இராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எங்கள் பாதுகாப்புப் படையின் தயார்நிலைக்கு மிகவும் அவசியமான தற்காப்புப் பயிற்சிகள் தீவிரமானவை. அவை ஆபத்தைக் கொண்டுள்ளன"என்று மார்ல்ஸ் பிரிஸ்பேனில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Post a Comment