70பேருடன் ஆற்றில் பாய்ந்த பேரூந்துபொலனறுவை கதுருவெலவில் இருந்து மட்டக்களப்பு காத்தான்குடி நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தொன்று, மன்னம்பிட்டி கனேவல பகுதியில், பாலத்திலிருந்து விலகி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக சம்பவ இடத்திலிருந்த எமது செய்தியாளர் தகவலளித்தார்.

ஆற்றில் பாய்ந்த பேருந்தில் சிறுவர்களும் பயணித்த நிலையில், அவ் வீதியூடாகப் பயணித்த பேருந்துகளின் பயணிகள், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments