விக்டர் சோசை அடிகளார் விபத்தில் காயம்!அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் உட்பட்டவர்கள் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் மூவர் காயமடைந்த நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடு தேவாலயத்திலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த ஹையஸ் ரக வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

சம்பவத்தில் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், சாரதி மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர்.

மடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி பூசை நிறைவடைந்த நிலையில மன்னார் நோக்கிப் பயணித்த போதே விபத்து நிகழ்ந்துள்ளது.

No comments