24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து


போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான அனைத்து பரிவர்த்தனைகளையும் டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பெற்றுக்கொள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏழு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள மோட்டார் போக்குவரத்து சட்டத்தை புதுப்பித்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபையினால் இயக்கப்படும் 50 மின்சார பேருந்துகளை சேவையில் இணைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

No comments