எதிர்ப்புக்களுக்கு மத்தியில் , வேலணை மத்தி அதிபர் கடமையேற்பு!


சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். 

பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை சார்ந்தவரை நியமிக்காதே என கடந்த வாரம் போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர். 

அதனை அடுத்து குறித்த விடயம் பேசுபொருளாகி இருந்தது. மத வாதங்களை முன் வைக்காதீர்கள் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில் , பாடசாலையின் பாரம்பரியத்தை மீறி அதிபர் நியமனம் நடைபெற்றதாக பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாடசாலை முன்றலில் மாணவர்கள் சிலரும் அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி இருந்தனர். 

அந்நிலையிலையே புதிய அதிபராக கஸ்ரன் றோய் கடமையேற்றுள்ளார். 

No comments