அகதிகளுக்கான தங்குமிடமாக கப்பலை மாற்றியது இங்கிலாந்து அரசு

இங்கிலாந்தில் புகலிடம் தேடி வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக கைவிடப்பட்ட கப்பல் ஒன்று தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு வரும் அகதிகளின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை அவர்கள் தற்காலிகமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

அதற்கு ஆகும் செலவை குறைக்கும் வகையில் இங்கிலாந்து அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ள அந்த கப்பல், தற்போது போர்ட்லேண்ட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், 500 ஆண்கள் வரை தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் வீடுகளில் தொலைக்காட்சிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அறைகள், பார்கள், உணவகங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.No comments