பகிடிவதை செய்த 7 மீனவர்கள் கைது


பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடி படகில், முதன்முறையாக மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக குறித்த மீன்பிடி படகு சென்றிருந்தபோது, குறித்த இளைஞரை கடலில் தள்ளிவிட்டு, சக மீனவர்கள் அவரை துன்புறுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, பேருவளை – அம்பேபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments