ஓமந்தையில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு


வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருநபர் படுகாயமடைந்துள்ளார்.

சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு படுகாயமடைந்த மற்றொரு நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் இராமச்சந்திரன் சதீஸ்குமார் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என்றும் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments