கண்டியில் விபத்து ; ரஷ்ய பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு


கண்டி, மீமுரே பிரதேசத்தில் காரொன்று நேற்றைய தினம்  சனிக்கிழமை பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ரஷ்ய இளைஞர் ஒருவரும் இலங்கை பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளனர். காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், இலங்கை பெண் 51 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments