அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு




அடுத்த ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொம்பே தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments