முல்லைத்தீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்


முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். No comments