புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்காமை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


நாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாவலையில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

நேர்மையான, வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம். குறைந்தது மக்களின் உயிர்களையாவது காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறான நிலையில்,பொலிஸ் மா அதிபர் ஓய்வுபெற்ற போது, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாமல் போனமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாடுகள் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார். 

No comments