காரைநகர் - ஊர்காவற்துறை பாதை சேவை ஆரம்பம்


நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை இடம்பெற்று வரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைவதால் , இரு ஊர்களுக்கும் இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பொது மக்கள் , அரச உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். 

கடல் பாதையில் சுமார் 05 நிமிடத்தில் கடக்க கூடிய ஊருக்கு தரை வழிப்பாதையாக செல்வதாக இருந்தால் , சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
No comments