ஆடிப்பிறப்பை முன்னிட்டு தங்கத்தாத்தாவிற்கு மரியாதை


ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலைக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பூக்கள் தூவப்பட்டது.

ஆடிப்பிறப்பு விசேட உணவுப் பண்டமான ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு அப்பகுதியில் நின்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும் வகையில் நிகழ்வை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தங்கத் தாத்தா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.சிவஞானராஜா அழைப்பு விடுத்தார்.



No comments