வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு


வடமாகாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பிய எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

 யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டியை நிறுவுவதற்கு , யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மயானத்தில் எப்பகுதியில் அதனை அமைப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. விரைவில் இடத்தினை அடையாளப்படுத்தி , பணிகளை ஆரம்பிக்க உள்ளோம். 

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் உள்ள எரியூட்டி திருத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அரச வைத்திய சாலை மருத்துவ கழிவுகள் எரியூட்டப்படும். 

தனியார் மருத்துவ மனைகள் மருத்துவ கழிவுகளை கொழும்புக்கு எடுத்து சென்றே எரியூட்டுகின்றன என மேலும் தெரிவித்தார். 


No comments