அரசாங்கத்தின் முதல் காலாண்டு வரி வருமானம் 1,154 பில்லியன்


இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் 1,154 பில்லியன் வரி வருமானத்தை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சின் அறிவிப்பின்படி, மொத்த வருமானத்தில் 850 பில்லியன் மறைமுக வரிகளும் 304 பில்லியன் நேரடி வரிகளும் அடங்கும்.

2022 ஆம் ஆண்டிற்கான மொத்த வரி வருமானம் 1,751 பில்லியன் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 333,313 என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையில் 291,677 வருமான வரிக் கோப்புகளும், 41,636 செலுத்தும் வரிக் கோப்புகளும் அடங்கும் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் வரித் தளத்தை விரிவுபடுத்தும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களுக்கும் பொருந்தக்கூடிய மறைமுக வரிகளைக் குறைக்கவும், வருமான அளவை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்படும் நேரடி வரிகளை அதிகரிக்கவும் அரசாங்கம் விரும்புவதாக கூறியுள்ளார்.

No comments