வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம்


மக்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்து வங்கி முறையை பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் மக்களின் பணத்தை அரசாங்கம் எடுப்பதாகவும், வங்கி அமைப்பு சீர்குலைந்து வருவதாகவும் தவறான தகவல்கள் பயப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும், திறைசேரியால் வழங்கப்பட்ட உண்டியல்கள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்த எந்தவொரு முதலீட்டாளருக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments