ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்காதீர்கள்


ஏழைகளின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரச தலைவர்கள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய வங்கி கொள்ளை, யுத்தத்தின் போது கொள்ளை என வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள அனைவரும், மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கிறார்களே தவிர நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வருவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், இன்று மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையினர் குறித்து எவ்வித திட்டமும்அரசாங்கத்திடம் இல்லை என்பதோடு சிறந்த தலைவர் சிங்களவர்களிடம் இல்லை என்பதையே காலம் உணர்த்தும் இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய இனங்களையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தற்துணிவுடன் செயற்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

No comments