கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments