யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல்: 7 மாணவர்கள் காயம்!!


யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம் குருநகர் , சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று , சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது , அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டதில் , 07 மாணவர்களும் , கடலட்டை பண்ணை உரிமையாளர் ஒருவரும் , பண்ணை பணியாளர் ஒருவருமாக 09 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments