இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கையின் தென்கிழக்கே தென் இந்தியப் பெருங்கடலில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக மாலைதீவு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 12.59 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலி, அக்குரஸ்ஸ, கொழும்பு, களுத்துறை, பாணந்துறை உள்ளிட்ட கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் கொழும்பில் இருந்து 1260 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியதாகவும் இது தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment