கலவர பூமியாக மாறியது பிரான்ஸ்: தொடர்கிறது போராட்டம்!


கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் மகிழுந்தில் பயணித்த 17 வயது இளைஞன் போக்குவரத்து காவல்துறையினரால் வீதியில் மறிக்கப்பட்ட போது மகிழுந்தை இளைஞன் நிறுத்தாததால் காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர். 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையின் இந்த செயலுக்கு எதிராக வீதியில் இறங்கி நீதி கேட்டுப் போராடத்தைத் தொடங்கினர். பின்னர் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் வெடித்தன.

குறித்த போராட்டம் மூன்றாவது இரவாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 875 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுமார் 1,900 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் போன்ற 500 பொது கட்டிடங்களில் தீ மூட்டப்பட்டது. மொத்தம் 3,880 தீ ​​எரிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. 249 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இப்போராட்டம் வீதிகளில் உள்ள வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அத்துடன் குப்பைத் தொட்டிகளுக்கும் எரிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.

பிரான்ஸ் முழுவதும் 40 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் ஜனாதிபதி நெருக்கடியைத் தணிக்க கூட்டம் ஒன்றுக்க தலைமை தாங்க உள்ளார்.

Lyon, Grenoble, Annecy மற்றும் Saint-Etienne உட்பட பல பிரெஞ்சு நகரங்களில் வெடித்த வன்முறைகள் வெடித்துள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரி இப்போது கொலைக்கான விசாரணையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தப்படவில்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பிரான்சில் 17வயது இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் அயல் நாடான பெல்ஜியத்திலும் பரவியுள்ளது.

நேற்ற வியாழன் பிற்பகுதியில், அமைதியின்மைக்கு மத்தியில் 30 பேர் கைது செய்யப்பட்டதாக பெல்ஜிய காவல்துறையினர் தெரிவித்தனர். 


No comments