கடற்படைக் கப்பலில் துக்கிட்டு உயிரிழந்த கடற்படை அதிகாரி


கடற்படை கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பல் நேற்று(14) தரிந்திருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய கொமடோர் தர அதிகாரி ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த அதிகாரி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என துறைமுக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments