தொடரும் பரிதாபம்!
வடபுலத்தை போதைப்பொருள் ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் ஹேரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் அர்ச்சகர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய அர்ச்சகரே இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களிற்கு முன்னதாக திருநெல்வேலிப்பகுதியிலும் இந்து மத குருவொருவர் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்டபோது உயிழந்திருந்தார்.
Post a Comment