அமெரிக்க பெற்றோலும் வருகின்றது

 


இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக Shell Plc உடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவின் RM Parks Inc.க்கும் இடையில்  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) மாலை  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


No comments