ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு திட்டமாம்!

 


இலங்கை முழுவதுமாக ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது. தேசியக் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது எனவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடைடையே “வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட பாடசாலைகளுக்கான காரணத்தினை ஆராய்ந்தபோது வடக்கில் சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கிறது.அதற்கான காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

அதே காரணத்தால் கிழக்கிலே மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை மூடிக்கொண்டிருந்தோம் எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் பாடசாலைகள் மூடப்படுகின்றமை தொடர்பில் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.



No comments