யேர்மனியில் குறுக்குவில் தாக்குதலில் இளைஞன் காயம்!


வடக்கு யேர்மனியில் குறஸ்போ என்று அழைக்கபடும் வில்லால் சுடப்பட்டதில் இளைஞன் ஒருவர் காயடைந்தார்.

ஹன்னோவரில் இருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள லோயர் சாக்சனியில் உள்ள பெய்னில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே இந்த  சம்பவம் நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

29 வயதுடைய தாக்குதலாளியான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொிய கத்தியும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் துரித செயற்பாட்டால் மேலும் மற்றவர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் தடுக்க முடிந்தது என்றும் தாக்குதலாளியை தடுக்க முடிந்ததும் என்று காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்  குறிப்பிட்டனர்.

தாக்குதலாளியான சந்தேக நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட வரலாறு இருப்பதாகவும் அவரின் தீவிர வலதுசாரி நோக்கம் குறித்தும் விசாரணைகளை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தாக்குதலாளி அணிந்திருந்த ஆடையின் தோற்றம் அவர் தீவிர வலதுசாரி தொடர்புகளைக் புலப்படுத்தியது.

காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வருகிறார்.அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments