மகிந்த விளக்கமறியலில் !

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகமவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

கொம்பனித் தெருவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு தடவைகள் காசோலைகள் மற்றும் பணமாக இந்த தொகையை முறைப்பாட்டாளர் சந்தேக நபருக்கு வழங்கியுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளது.

இதன்படி, கொம்பனித் தெரு பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கண்டியை சேர்ந்த ஜயந்த முனவீர என்பவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் பிரிவு 07 க்கு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments