இயந்திர கோளாறாம்:மீட்பு!
இந்திய கடற்றொழிலாளர்கள் 9 பேர் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த படகு, இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Post a Comment