கொலைச்சதியென்கிறது முன்னணி! தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மீது கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்ட போதும் அவர் பாதுகாப்பாக இருப்பதாக கட்சி பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களை சந்திப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்று அங்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களை சந்தித்துக் கொண்டிருந்த வேளை அங்கு சந்தேகத்திற்க்கு இடமான ஒருவர் அங்கு நடமாடிக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அவ்வேளை அதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பகுப்பாய்வு அதிகாரி விசாரித்த போது தன்னை ஒரு புலனாய்வு அதிகாரி என அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.அவ்வேளை பகுப்பாய்வு அதிகாரி புலனாய்வு அதிகாரியிடம்; அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளார்

அவ்வேளை அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புலனாய்வு அதிகாரியிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரிய வேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

அதேவேளை அங்கு அவருடன் வருகைத்திருந்த மற்றொருவர் பிடிக்கப்பட்டு இலங்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


No comments