சீன மண்ணெய் நல்லது :டக்ளஸ்! சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விநியோகித்துவருகின்ற நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதரகத்தை நாடியுள்ளனர்.

இதனிடையே தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும் மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை மாற்றியிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து இந்திய தூதரினை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளமையினையே டக்;ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார்.


No comments