சென்னையிலிருந்து கப்பல் வருகின்றது

 


எதிர்வரும் சனிக்கிழமை சென்னையிலிருந்து ஒரு தொகுதி பிரயாணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகை தரும் கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீபாலடீ சில்வா தலைமையிலான அமைச்சர் குழாம் ஒன்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரியவருகின்றது.

காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக பரீட்சாத்தமாக சென்னையில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன,

ஏற்கனவே பலாலிக்கும் சென்னைக்குமிடையிலான விமான சேவை வாரம் முழுவதுமாக விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னதாக தூத்துக்குடியிலிருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் சேவை பற்றி அறிவிக்கப்பட்ட போதும் தற்போது தூத்துக்குடி கைவிடப்பட்டு தற்போது புதிய துறைமுகத்திற்கு மாற்ற இந்திய அரசு முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments