முதலில் மாகாணசபை தேர்தல்?
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு வேட்புமனுவை மீண்டும் அறிவிப்பதே சிறந்தது என ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,711 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, 80,672 வேட்பாளர்கள் முன்வந்திருந்தனர்.
அத்துடன், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளிற்கு தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment