சாந்தன் விடுதலை எப்பொழுது?

 


32 வருடங்களாக இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு விசேட தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த நிலையில் கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்னமும் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகின்றது.

இந்நிலையில் 75 வயதில் உள்ள தான், தனது மகனுடன் சிறிது காலமேனும் வாழவேண்டும் என சாந்தனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த 32வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது விடுதலை தொடர்பில் சாந்தனும் இந்திய பிரதமரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமராட்சியின் உடுப்பிட்டியினை சேர்ந்த சாந்தன் ஜரோப்பிய நாடொன்றிற்கு பயணிக்க ஏதுவாக தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில் ரஜீவ் காந்தி கொலையினையடுத்து 18வயதினில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments