அனுர மானதுங்க இராஜினாமா!
வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தை தொடர்ந்து இலங்கையின் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர். அனுர மானதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தொல் பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியிருந்தார்.
தனது இரஜினாமா கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணிகளை பறித்து விகாரைகளை அமைக்கும் செயற்திட்டத்தை தொல்பொருள் திணைக்களம் இடைநிறுத்த மறுத்துவருகின்றது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மீறி;, தொல்பொருள் திணைக்களம் சுயமாக அதிகாரத்தைப் பயன்படுத்த முற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அண்மையில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.
அதன்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அப்போது வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்துமாறும், பௌத்த விகாரைகளைக் கட்டும் பணிகளை இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் தொல்பொருள் திணைக்களம் தமது செயற்பாடுகளை இன்னமும் நிறுத்திக் கொள்ளாத நிலையில் தனது இராஜினாமா கடிதத்தை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க அனுப்பியுள்ளார்.
Post a Comment