ரணில் தந்தது அல்வாவே!
குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரருக்கு ஜனாதிபதி செயலகத் இத்தகவலை அறிவித்துள்ளது.
குருந்தூர் மலை நிலம் என்பது அரசநிலம் என தெரிவித்துள்ள எல்லாவல மேதானந்த தேரர் அதனை எவருக்கும் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையினை பொருட்படுத்தாது கட்டப்பட்ட விகாரை தொடர்பில் சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.
இந்நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பினையடுத்து தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் குருந்தூர்மலை விவகாரத்தையடுத்து பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தால் விகாரை கட்டுமானத்தை சூழ ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையிலேயே குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment