முன்னாள் போராளியிடம் வாக்குமூலம்!தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மீதான மருதங்கேணி அச்சுறுத்தல் தொடர்பில் யாழ் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் இலங்கை காவல்துறையினால்; விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

மருதங்கேணியில் இலங்கை காவல்துறையின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றிருந்தது,

முன்னாள் போராளியான பிரதீபன் சம்பவம் தொடர்பில் செய்தி மூலமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி வழி காணொலியொன்றை தான் பணியாற்றிய சிங்கள தொலைக்காட்சி ஊடகத்திற்கு அனுப்பியிருந்தார்.

செய்தி நிறுவனத்திடம் நடத்தப்பட்ட விசாரணையினை தொடர்ந்தே ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் இலங்கை காவல்துறையினால்; விசாரணை நடாதப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னணியின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அறுவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments