ஆமி கட்டிய விகாரையே !!

 முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரை கட்டுமானம் இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

படையினராலேயே விகாரை கட்டுமானப்பணி இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக பதிக்கப்பட்ட கல்வெட்டின் ஊடாக உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

இதேவேளை குருந்தூர் மலைக்கு வருகைதருபவர்களையும், வாகனங்களையும் இராணுவத்தினர் பதிவு செய்துவருகின்ற நிலையில் குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று புதன்கிழமை (21) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

கம்மன்பிலவின் வருகைக்கு  முன்னதாக குருந்தூர்மலை அடிவாரத்தில்   ஒன்றுகூடிய தண்ணிமுறிப்பு  மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் அதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.


No comments