நூலக எரிப்பின் 42வது நினைவேந்தல்!
ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று 42ஆவது ஆண்டு நிறைவடையும் நிலையில் இன்றைய தினம் பல்வெறு தரப்பு;ககளாலும் நினைவு கூரப்பட்டுள்ளது.
இதனிடையே வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வுபூர்வமாக நூலக எரிப்புநினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
யாழ் பொது நூலக எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
1981 ஆம் ஆண்டு கடும்போக்குவாத அரசின் கைக்கூலிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட யாழ் நூலக எரிப்பு இடம் பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
தற்போதைய ஜனாதிபதியின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் பொதுநூலகம் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment