கிளியூடாக மணல் எடுத்துச்செல்ல தடை

 


கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி மாவட்டத்தினுள் கொண்டு செல்லத்  தடை செய்யப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், அங்கஜன் இராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் செயற்பட்ட காலத்தில் கௌதாரிமுனை பிரதேசத்தில் பாரிய மணல் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய காலப் பகுதியில் அவ்வாறான மோசடிகள் இடம்பெற அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கௌதாரிமுனையில் அமைக்கப்படவுள்ள காற்றாலை திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments