நிகழ்வு ஒன்றில் கீழே விழுந்தார் அமெரிக்க ஜனாதிபதி


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) கொலராடோவில் நடைபெற்ற அமெரிக்க விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட போது தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக மூன்று அமெரிக் இரகசியசேவை உறுப்பினர்கள் உடனடியாக விரைந்து தூக்கி உதவினர். பின்னர் அவரே தனது இருக்கையில் திரும்பிச் சென்று இருந்தார்.

பிடன் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் பென் லபோல்ட் தெரிவித்தார்.

விழாவில், நீல சீருடை அணிந்த பட்டதாரிகளுக்கு அவர் வரவேற்புரை வழங்கினார். பின்னர் அவர் கடற்படை அதிகாரிக்கு கைகுலுக்கிவிட்டு இடதுபுறமாக தனது இருக்கைக்குப் போகும் போது மேடையில் மணல் மூடையில் கால் தடக்குப்பட்டு கீழே விழுந்தார்.No comments