ரஷ்ய - ஈரான் இராணுவக் கூட்டாண்மையில் ட்ரோன்கள் தயாரிக்கும் ஆலை: கவலையில் அமெரிக்கா!!


ரஷ்ய நாட்டுக்குள் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் ரஷ்ய - ஈரானிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலையடைகிறோம் ரஷ்யா-ஈரான் இராணுவ கூட்டாண்மை ஆழமடைந்து வருவதாக தோன்றுகிறது என்று கிர்பி வெள்ளிக்கிழமை அறிக்கையில் கூறினார். 

ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ரஷ்யாவில் ஆளில்லா விமானங்களைத் தாயரிக்கும் ஆலையை உருவாக்க ஈரானிய அரசாங்கம் ரஷ்யாவுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டினார் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

ஈரான் இந்த ஆலைக்குத் தேவையான பொருள் ஆதரவை வழங்கியது, இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படக்கூடும் எ்ன்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2022 இல் ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பமானதிலிருந்து  ஈரான் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது. இதனால் மோதல் களத்தில் பல ரஷ்யா சார்பான மாற்றங்கள் நடைபெற்றன. இவை நேட்டோ உட்பட உக்ரைன் மற்றும் உக்ரைன் சார்பான 50 பிளஸ் நாடுகளின் ரஷ்யா தோற்கடிக்கும் இராணுவ திட்டங்களுக்கு மிகச் சவாலாக அமைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments