கொலம்பிய விமான விபத்து: 40 நாட்கள் கடந்த நிலையில் 4 குழந்தைகள் உயிருடன் மீட்பு!


கொலம்பியாவில் கடந்த மே மாதம் முதலம் நாள் நடைந்த விமானம் அடர்ந்த காட்டில் விபத்துக்குள்ளாகி நொருங்கி விழுந்தது. இதில் 7 பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.

விபத்து நடத்த 5 வாரங்கள் கடந்த நிலையில் நான்கு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் Caqueta மற்றும் Guaviare மாகாணங்களுக்கு இடையே உள்ள எல்லைக்கு அருகே, சிறிய விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் குழந்தைகள் நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தால் மீட்கப்பட்டனர்.

செஸ்னா 206 ரக விமானம், அமேசானாஸ் மாகாணத்தில் உள்ள அரராகுவாராவிற்கும் குவேரியார் மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் குவேரியார் நகருக்கும் இடையே ஏழு பேரை ஏற்றிச் சென்றபோது, ​​மே 1 அதிகாலை இயந்திரக் கோளாறு காரணமாக அடர்ந்த காட்டில் விழுந்து நொருங்கியது.

விமானி மற்றும் குழந்தைகளின் தாய் உட்பட மூன்று பெரியவர்கள் விபத்தில் இறந்தனர் மற்றும் அவர்களின் உடல்கள் விமானத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன.

3, 3, 9 மற்றும் 12 மாத குழந்தையும் விபத்திலிருந்து தப்பித்து 40 நாட்கள் கடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்து சிகிற்சைக்காக தலைநகர் பொகோட்டாவுக்கு இன்று சனிக்கிழமை அதிகாலை வந்தடைந்தனர்.

No comments