'ஐ.என்.எஸ். வாகீர் கொழும்பில்!

 


இறுதி யுத்த காலத்தில் முக்கிய பங்காற்றிய இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ். வாகீர் (INS vagir) என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுப்படி நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுக்கொண்டனர்    

இது 67.5 மீற்றர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக்கப்பலாகும்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு கடற்படை கட்டளை பிரிவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் நீர்மூழ்கிக் கப்பலின் முழு இந்திய கடற்படையினரும் மற்றும் இலங்கை கடற்படையின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர், மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவும் இந்திய கடற்படையிரும் நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர் 

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நீர்மூழ்கி கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி புறப்பட உள்ளது.

No comments