எதோ களவிருக்கிறது:சிறீதரன்!

ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக ஈழ மண்ணில் முன்னெடுத்த தேசியத் தலைவர் தொடர்பிலான மரபணு அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவது  ஏதோ ஒரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தாங்கள் முன்னாள் போராளிகளான கருணா மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் மூலம் மரணத்தை வெளிப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அவர்கள் பார்வையிடலாமே தவிர மரபணு அறிக்கையை வெளியிடக்கூடிய அளவிற்கு அவர்கள் நிபுணர்கள் அல்ல. அத்தோடு அவர்களுக்கு வைத்திய அறிவும் கிடையாது.

ஆகவே அரசாங்கம் தான் தெளிவான எண்ணத்தைக் கொண்டிருந்தால், உண்மை என்றால் உண்மையை வெளியிடுவது பொருத்தமானது” எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய தலைவருடையதென இலங்கை அரசினால் காண்பிக்கப்பட்ட உடலம் தொடர்பிலான மரபணு பரிசோதனை அறிக்கையினை வெளியிடக்கோரி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்; விண்ணப்பித்திருந்தார்.

எனினும் தேசிய பாதுகாப்பினை காரணங்காட்டி தகவல்களை வெளியிட இலங்கை அரசு மறுதலித்துள்ளமை தெரிந்ததே.


No comments