ஆஸ்திரேலியாவில் திருமண பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலிய வைன் (wine ) பிராந்தியத்தில் திருமண பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமான வைன் ஹண்டர் பள்ளத்தாக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வைன் ஆலையில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டுப் பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களின் பேருந்து கவிழ்ந்தது.
58 வயதான பேருந்து ஓட்டுநர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்து கவிழ்ந்த விபத்தின் போது புதுமணத் தம்பதிகள் பேருந்தில் இருக்கவில்லை. காவல்துறையினரின் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் காவல்துறை ஆணையாளர் கரேன் வெப் கூறினார்.
உள்ளூர் நேரப்படி 23:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. நெடுஞ்சாலையில் ஒரு வட்டவளைவில் (roundabout) திருப்பம் செய்யும் போது பேருந்து கவிழ்ந்தது. தற்போது வாகனம் நிமிர்ந்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்தவிட்டு பயணிகள் அவர்களின் தங்குமிடம் நோக்கிச் சென்றபோதே விபத்து நடத்தது. விபத்தில் இருந்து தப்பிய இருவர் வான்வழி மூலம் மீட்கப்பட்டனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அது போன்ற ஒரு அழகான இடத்தில் மகிழ்ச்சியான நாள் இவ்வளவு பயங்கரமான உயிர் இழப்புகளுடன் முடிவடைவது மிகவும் கொடூரமானது, மிகவும் சோகமானது மற்றும் மிகவும் நியாயமற்றது என்று கூறினார்.
Post a Comment