உக்ரைனில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்கும் உக்ரைனின் வலிந்த எதிர்த்தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிளாஹோடட்னே, நெஸ்குச்னே மற்றும் மகரிவ்கா ஆகிய கிராமங்களை உக்ரைனியப் படைகள் மீளவும் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை மாஸ்கோ இன்னும்  உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் ஜபோரிஜியா நோாக்கி கிராமங்களைப் பிடித்தாலும் ரஷ்ய முன்னரங்க நிலையில் எட்டுவதற்கு 95 கிலோ மீற்றர் தூரம் இருப்பதாக கூறப்படுகிறது.

உக்ரைன் தங்களது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கூறினார். அவர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

தாக்குதல்கள் பெரும்பாலும் ரஷ்யப்படைகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதுவரை உக்ரைன் தரப்பில் 5,000 படையினர் கொல்லப்பட்டதாகவும், 130 பீரங்களிகள், பல கவச வாகனங்கள், அமெரிக்க துருப்புக் காவிகள் என பல இராணுவ தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியின் லெப்பேர்ட் டாக்கிகள் 25 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் சமரில் மட்டும் 30 டாங்கிகளை உக்ரைன் இழந்துள்ளது. அதுவும் இரண்டு மணி நேரத்தில் உக்ரைனின் தாக்குதலை ரஷ்யா முறியடித்துள்ளது. இதற்கான காணொளிகளையும் ரஷ்யா வெளியிட்டிருந்தது.

No comments