கோண்டாவிலில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர். 

No comments